திருச்சியில் இருந்து ஓமனில் உள்ள மஸ்கட்டுக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் நேரடி விமான சேவை உள்ளது. இந்த விமானம் தற்போது 90 சதவீத பயணிகளுடன் இயங்குகிறது. மேலும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் அடிக்கடி பயணிப்பவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மஸ்கட்டுக்கு கூடுதல் விமான சேவையை வழங்க முன் வந்துள்ளது. அந்த வகையில் வருகிற ஜனவரி மாதம் முதல் திருச்சியில் இருந்து ஓமனில் உள்ள மஸ்கட்டிற்கு வாரத்தில் திங்கட்கிழமைகளில் மாலை 6 மணிக்கு கூடுதல் விமானம் இயக்கப்பட உள்ளது.இந்த விமானம் இரவு 8.40 மணிக்கு மஸ்கட் சென்றடையும். பினனர் மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கு இரவு 9.40 மணிக்கு புறப்படும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.