வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்”(கோட்) திரைப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியிலும், விஜயின் ரசிகர்கள் மத்தியிலும் அவை பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. அது பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் 3 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை எல்லாம் தாண்டி, கோட் படத்தின் இரண்டு முக்கியமான விஷயங்கள் என்றால், அது AI தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்ட இளையராஜா மகள் பவதாரணியின் குரலும், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் காட்சிகளும் தான்.ஏற்கனவே நடிகர் விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் இந்த திரைப்படத்தில் இணைக்க அவரது குடும்பத்தாரிடம் அனுமதி பெறப்பட்டது.அதற்காக அவரது குடும்பத்தாரை சந்தித்து விஜய் நன்றி கூறினார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் சென்றிருந்தார்.