சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை (04.10.2024) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து ஐசியூவில் இருந்து வந்த அவரை தற்போது தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இன்று நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.