நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நல பாதிப்பால் காலமானார்!

- Advertisement -

0

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து அதன் மூலம் சினிமாவுக்குச் சென்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில் ஜிபி முத்து, பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோரை குறிப்பிட்டு சொல்லலாம்.சமூக வலைதளங்களில் மீம் கண்டன்ட்டாக இருந்த பிஜிலி ரமேஷ், அதற்குப் பிறகு ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டினார். இயக்குநர் நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பொன்மகள் வந்தாள், நட்பே துணை, கோமாளி, ஆடை உள்ளிட்ட பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

தொடர்ந்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் உருவாக்கினார் பிஜிலி ரமேஷ். பல படங்களில் ஒரு சில சீன்களில் அவர் வந்தால் கூட ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தது. தீவிர ரஜினி ரசிகரான அவர் ஒரு யூட்யூப் சேனல் நடத்திய பிராங்க் ஷோ மூலம் தான் உலக அளவில் பேமஸ் ஆனார். சினிமாவில் நடித்திருந்தாலும் தனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என பிஜிலி ரமேஷ் கூறியிருந்தார். இதை அடுத்து திரைத்துறையில் இருந்த பலர் அவருக்கு உதவினர். மேலும் சிகிச்சைக்குக் கூட பணம் இல்லாமல் தவிக்கும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தான் அவர் இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதிகாலையில் அவர் உயரிழந்த நிலையில் இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதை அடுத்து திரைத்துறையினரும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.