திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, லிங்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பொன்னுசாமி. இவரின் மனைவி வீரம்மாள். தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், 3 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். மீண்டும் கர்ப்பம்இதனிடையே, வீரம்மாள் மீண்டும் கர்ப்பம் தரித்ததாக கூறப்படுகிறது. மேலும், குழந்தை வேண்டாம் என நினைத்த வீரம்மாள், மருத்துவரின் எந்த விதமான அனுமதியும் இன்றி கருக்கலைப்பு மாத்திரையை உட்கொண்டு இருக்கிறார்.
இதனால் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இருக்கிறார். கருக்கலைப்பு மாத்திரையால் விபரீதம்இதனால் ஒருக்கட்டத்தில் உயிரிழந்து இருக்கிறார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர், வீரம்மாள் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.