திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் இந்திய முன்னாள் ஜனாதிபதியும் விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு லயன்ஸ் சங்க தலைவர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையில் சாசன தலைவர் முகமது ஷபி, பொருளாளர் சரவணன், துணைப் பொருளாளர் ஹேமலதா, சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி பிரென்ஞ்ச் துறை தலைவர் ஹேமலதா பேசுகையில், அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானியாகவும் ஆசிரியராகவும் இருந்தவர் 1998 ஆம் ஆண்டு பொக்ரான்-II அணு ஆயுதங்களில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.அதனால் அவர் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்பட்டார். பொதுமக்களால் மிகவும் நேசிக்கப்பட்டார். மாணவர்கள் மற்றும் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக டாக்டர் கலாமின் முயற்சிகளை நினைவு கூறும் வகையில் மாணவர் தினம் கொண்டாடப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு, அவர் சில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் விரிவுரை ஆற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு தனது இறுதி மூச்சை விட்டுவிட்டார்.நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என அப்துல் கலாம் கூறியதை நினைவு கூர்ந்தார்.