கோவை பாரதியார் பல்கலையில் கவர்னரிடம் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் பிரகாஷ், பல்கலை முறைகேடுகள் தொடர்பாக கவர்னரிடம் மனுவும் கொடுத்தார்.கோவை பாரதியார் பல்கலை 39வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அப்போது, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்று கொள்ள பிரகாஷ் என்ற மாணவன் மேடைக்கு வந்தார்.
அப்போது, அவர் கவர்னர் ரவியிடம் பல்கலை முறைகேடுகள் தொடர்பாக புகார் மனு அளித்தார். பி.எச்.டி., மாணவர்களிடம் முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் பணம் கேட்பதாக, பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.தனிப்பட்ட வேலைகளை, பேராசியர்கள் செய்ய சொல்கிறார்கள். பல்கலையில் நடக்கும் முறைகேடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரகாஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் ரவி புகார் மனுவை பெற்றுக்கொண்டார். இதையடுத்து, முனைவர் பட்டத்துடன் கவர்னர் ரவியுடன் பிரகாஷ் போட்டோ எடுத்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.