திருச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் நெகிழி ஒழிப்பு குறித்த சிறப்பு நிகழ்ச்சி..!

- Advertisement -

0
திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர் தயாநிதி நினைவு வித்யாசலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில்  தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமில் நெகிழி ஒழிப்பு குறித்த சிறப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்  விஜயகுமார் நெகிழி  ஒழிப்பு குறித்து பேசுகையில்,நெகிழி  அழிக்க இயலாத ஒரு பொருளாக உள்ளது. நெகிழி தண்ணீர் பாட்டில்கள், பைகள் மற்றும் உறிஞ்சு குழல் போன்ற பொருட்களில் 33 சதவீதம், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. தூக்கி எறியப்பட்ட நெகிழி பொருட்கள் 1000 ஆண்டுகளுக்கு மேலும் அழியாமல் அதே நிலையிலேயே இருக்கிறது.நெகிழியில் இருந்து வெளியேறும் நச்சு இரசாயனங்கள், மனிதரின் இரத்தம் மற்றும் திசுக்களில் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்பாடாக புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா சுரப்பிகள் அழற்சி மற்றும் பிற நோய்களும் ஏற்படுகின்றன.நெகிழியில் உள்ள சில சேர்மங்களும், அதன் துணைப்பொருட்களும் மண் மற்றும் நிலத்தடி நீரை காலப்போக்கில் தொடர்ச்சியான கரிம மாசுகளாக மாற்றுகின்றன. விலங்குகள் நெகிழியை உணவாக உட்கொள்ள நேரிடுகிறது

- Advertisement -

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி மண்ணுக்கும் மனிதனுக்கும் பெரும்  அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பொருட்களை ஒவ்வொருவரும் மனது வைத்தால் முற்றிலுமாகத் தவிர்க்க முடியும்.பழங்கள், காய்கறி, பூக்கடைக்குச் செல்லும்போது துணிப் பைகள் , சணல் பைகள் மற்றும் காகித பைகளை பயன்படுத்தலாம் என்றார்.  ஒயிட் ரோஸ் பொதுநல சங்கத் தலைவர் சங்கர் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நாட்டின் நலப்பணித் திட்ட அலுவலர் சுப்ரமணி வரவேற்றார். நிறைவாக கருப்பசாமி நன்றி கூறினார்.
Leave A Reply

Your email address will not be published.