சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வாழையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த ஒரு நாள் நிலையப் பயிற்சி!

- Advertisement -

0

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாழை சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய ஒரு நாள் நிலையப் பயிற்சி நாளை (24.10.2024) நடைபெறுகிறது .

- Advertisement -

முக்கனிகளில் ஒன்றான வாழை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. பயிருக்குத் தேவையான பேரூட்ட சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை சரியான அளவில் சரியான நேரத்தில் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கச் செய்யலாம். இதனை கருத்தில் கொண்டு இப்பயிற்சியில் வாழையில் ஊட்டச்சத்து மேலாண்மை, உர நிர்வாகம், நுண்ணூட்டம் அளித்தல் போன்ற தலைப்புகளின் கீழ் வாழையில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 04312962854, 9171717832, 8508835287 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.