கதிரேசன் செட்டியாரின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகரில் செயல்பட்டு வரும் தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மு முகாமில் எலும்பு அடர்த்தி பரிசோதனை, சர்க்கரை நோய் இரத்த பரிசோதனை, ரத்தத்தின் கொழுப்பு அளவு கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு பரிசோதனை, நீரிழிவு நரம்பியல் பரிசோதனை மற்றும் ரத்தத்தின் யூரிக் அமிலம் கண்டறிதல் போன்ற பரிசோதனைகள் இலவசமாக அளிக்கப்பட்டது. மேலும் எலும்பு முறிவு, மூட்டு வலி, பொது மருத்துவம், சர்க்கரை நோய், நுரையீரல் நோய், தோல் நோய், பிசியோதெரபி மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் டாக்டர் ரோஷன் ராஜ், தில்லை மெடிக்கல் மனோகரன் டாக்டர் ஞானசேகரன் டாக்டர் ராமநாதன் டாக்டர் விக்னேஷ் குமார் டாக்டர் அனுசியா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்