ரோட்டரி சங்கம் மற்றும் தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல் ஜமாத் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்…!
ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் மற்றும் தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல் டிரஸ்டி போர்டு & ஜமாத் கமிட்டி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
.இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் முகமது நாசர், செயலாளர் ஜோசப்ராஜ்,பெஞ்ச்மார்க் மெடிக்கல் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர், டாக்டர் சுனில் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற முகாமில் பிபி உயர் இரத்த அழுத்தம் பரிசோதனை, சுகர் நீரழிவு பரிசோதனை, ECG இதய பரிசோதனை, EEG நரம்பியல் பரிசோதனை, BMD எலும்பு அடர்த்தி திரையிடல் & பரிசோதனை, கண், பல் பரிசோதனை, மகளிர் மருத்துவம், காய்ச்சல், இருமல், காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள் வழங்கப்பட்டன .வரும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு டானிக், களிம்பு, மாத்திரைக்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.முகாமில் 4000/-மதிப்புள்ள மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த பரிசோதனை முகாமில் பெஞ்ச்மார்க் மெடிக்கல் டிரஸ்ட், நியூரோ ஒன், ரெத்னா குளோபல் ஹாஸ்பிடல், வாசன் ஐ கேர், ஹேப்பி டென்டல் கேர் நிறுவனத்தின் டாக்டர்களும், செவிலியர்கள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்றனர்.முகாமில் 4000/-மதிப்புள்ள மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கம் மற்றும் தென்னூர் பள்ளி ஜமாத் நிர்வாகிகள் செய்தனர்.