சபரிமலை ஐயப்பன் கோவில் மேற்கூரையில் இருந்து கீழே குதித்த பக்தர்…! (வீடியோ)

- Advertisement -

0

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு சென்று ஐயப்பனை வழிபடுவார்கள். இந்த நிலையில் ஐயப்பன் கோவில் கட்டிடத்தின் மேற்கூறையில் இருந்து ஒரு பக்தர் கீழே குதித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. சக பக்தர்கள் கண்முன்னே அந்த நபர் மேற்கூரைலிருந்து கீழே குதித்தார்.

- Advertisement -

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் கர்நாடகாவை சேர்ந்த குமாரசாமி(40) என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.