கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கோட்டையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு லட்சுமி ராதாகிருஷ்ணன் (21) என்ற மாணவி வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதாவது இவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள ஒரு விடுதியில் இறந்து கிடந்துள்ளார்.இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மாணவியின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அந்த மாணவி இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.