அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் வரும் 2026 வது ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்.அதன்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒன்றிய, பகுதி, நகர அளவில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக் தலைமையில் திருவெறும்பூர் கூத்தைப்பார் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் கட்சி அமைப்புச் செயலாளர் மனோகரன் ஆகியோரை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தகூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தீபாவளிவை முன்னிட்டு 400 பேருக்கு வேட்டி சட்டையும்
300 பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது மேலும் இந்த கூட்டத்தில் தேர்தலை வெற்றி பெறுவதை பற்றி அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.மேலும் தங்கள் பகுதியில் எந்த பிரச்சினை நடந்தாலும் உடனடியாக பொதுமக்களை அணுகி அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கழக நிர்வாகிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் இப்படி தெரிவித்ததுடன் இந்த தகவலை நாங்கள் மாவட்ட செயலாளரும் மூலம் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டது