திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரில் மான்போர்ட் தனியார் சி.பி.எஸ்.இ. உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 3000 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு காலாண்டு விடுமுறை முடித்து பள்ளி திறக்கப்படும் நிலையில் அதிகாலை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.பள்ளி இ மெயில் முகவரிக்கு வந்த தகவலில் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாகவும், மதியம் 1 மணிக்குள் இந்த வெடிகுண்டு வெடித்து விடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பள்ளியின் முதல்வர் ராபர்ட் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் மற்றும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் விரைந்து வந்தனர்.
திருச்சி வெடிகுண்டு பிரிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் தலைமையில் சுமார் 7 பேர் மோப்ப நாய்களுடன் பள்ளி வளாகத்திற்குள் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர் .இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணத்தினால் திறக்கப்பட வேண்டியிருந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனிடையே திருச்சி மாவட்டத்தில் மேலும் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஸ்வேதா பாலகிருஷ்ணன் என்ற பெயரில் இந்த இமெயில் பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்ட ஹோலி கிராஸ் பள்ளி கல்லூரி, கேம்பியன் ஸ்கூல்,சமது மேல்நிலைப்பள்ளி, கேகே நகர் ஆச்சார்யா ஸ்கூல், புனித வளனார் பள்ளி உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சி.பி.எஸ்.இ. பள்ளி தவிர்த்து இதர பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் ஹோலி கிராஸ் கல்லூரி இன்று செயல்படுகிறது. எனவே வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் பாம் டிடெக்டர் கருவியுடன் இக் கல்லூரியில் அங்குலம் அங்குகலமாக சோதனை செய்து வருகின்றனர். மாணவிகள் யாரும் வகுப்பறையில் இருந்து இருந்து வெளியேற்றப்படவில்லை. சோதனையானது தொடர்ந்து நடைபெற்றுது. இரண்டு நாட்கள் முன்னர் மதுரையில் பிரபல ஹோட்டல்கள் மற்றும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.