திருச்சியில் அனிதா நினைவு நாளில் SFI & DYFI இணைந்து நீட் எதிர்ப்பு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை நீதிமன்றம் வளாகத்தில் இருந்து தமிழக குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்து சுப்பிரமணியபுரம் சங்கீத் மஹால் வரை முடிவடைந்தது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ்,இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் சம்சீர் அகமது, மாநகர் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட தலைவர் சூர்யா, துணை செயலாளர் ஹரி, ஆர்த்தி மற்றும் கிளை தோழர்கள் கலந்து கொண்டனர்.