கக்கன் காலனி மதுபான கடை மூடப்பட்டதற்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

- Advertisement -

0

திருவெறும்பூர் கக்கன் காலனி செல்லும் வழியில் உள்ளது அரசு மதுபான கடை இக்கடையினால் கக்கன் காலனிக்கு பொதுமக்கள் செல்லும் பொழுது குடிமகன்களால் தொந்தரவு ஏற்படுவதாகவும், அடுத்து அருகாமையில் உள்ள கோவில்களுக்கு செல்வதற்கும் மிகவும் இடையூறாக இருப்பதாகவும் கூறி இக்கடையை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கக்கன் காலனி பொதுமக்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருவெறும்பூர் தாசில்தார் செய பிரகாசத்திடம் புகார் கடந்த மாதம் மனு கொடுத்தனர்.

இதனை அடுத்து எந்த நடவடிக்கையும் தாசில்தார் எடுக்காததால் அடுத்து கலெக்டர் மற்றும் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி

- Advertisement -

யிடம் மனு கொடுத்தனர். அதிலும் எந்த தீர்வும் வராத காரணத்தால் தொடர்ந்து கக்கன் காலனி பொதுமக்கள் மற்றும் திருவெறும்பூர் சர்வ கட்சியினர் ஒன்று கூடி இதற்கான ஆலோசனை கூட்டம் முற்றுகைப் போராட்டம் செய்வது என்று முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 31 நேற்றைய தினம் மூடப்படும் செப்டம்பர் 1ஆம் தேதி இன்று முதல் கடை திறக்கப்படாது என்று அதில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஒருமுறை அவ்வப்பொழுது கக்கன் காலனி பொதுமக்கள் மற்றும் சர்வ கட்சியினர் ஒன்று சேர்ந்து தாசில்தாரிடம் நினைவூட்டி வந்தனர். 31 ஆம் தேதி கடை மூடப்படவில்லை என்றால் செப்டம்பர் 1ஆம் தேதி கடை முன்பு மறியல் போராட்டம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று 31ஆம் தேதி இரவு வியாபாரத்துடன் கடை மூடப்பட்டு விட்டது. இதனை அடுத்து கக்கன் காலனி பொதுமக்கள் பொதுநல ஆர்வலர்கள் இன்று கடையின் அருகே ஒன்று கூடி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் சர்வ கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.