அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க தீர்மானம் : தெற்கு மாவட்ட கழக கூட்டத்தில் முடிவு!
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று திருச்சி காவேரி பாலம் சிந்தாமணி அருகில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் வரவேற்பு நிகழ்த்தினார்.மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும், குடிநீர் வழங்கல் மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில் சிறப்பு தீர்மானமாக திருச்சி தெற்கு மாவட்ட கழக தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று எட்டாவது தீர்மானமாக அதை எட்டுகின்ற தீர்மானமாக நம்முடைய இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதலமைச்சர் ஆக்கிட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் மற்றும் தமிழக அரசிடம் இருக்கின்ற வேண்டுகோள்.கோரிக்கையை ஏற்று ஒட்டுமொத்த இயக்கத்தினுடைய இந்த வேண்டுகோளை எட்டாவது தீர்மானமாக வைத்து அந்த தீர்மானத்தை நீங்கள் அனைவரும் உங்கள் கரகோஷத்தின் மூலமாக எட்டாவது தீர்மானமாக நிறைவேற்றி தாருங்கள் அமைச்சர் என அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்சேகரன், சபியுல்லா, கவிஞர்சல்மா, செந்தில் திவ்யா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் மூக்கன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்