என்ஐடி மாணவியிடம் பாலியல் புகாரில் ஒருவர் கைது. எஸ்.பி. வருண்குமார் தலையீட்டதால் போராட்டம் வாபஸ்…

- Advertisement -

0

திருச்சி என்ஐடி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார்.பின்னர் அங்கிருந்த மற்ற மாணவிகள் பிடித்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டு இந்த வழக்கின் குற்றவாளியான கதிரேசன் நேற்று இரவே திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து எஸ் பி வருண் குமார்  கூறியதாவது, இந்த வழக்கின் குற்றவாளியான கதிரேசன் இவன் மீது ஏற்கனவே எந்தவித வழக்குகளும் இல்லை.வருங்காலங்கள் இது போன்ற பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு கல்லூரியில் உள்ள விடுதிகள் தோறும் எஸ் பி யின் அவசர அழைப்பு செல்போன் என்னை அச்சடித்து ஒட்டப்படும். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ மாணவிகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என கல்லூரி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளின் பிரச்சனைகள் குறித்தும் அவர்களது குறைகள் குறித்து காவலர்களைக் கொண்டு கேட்டு புரியும்படி போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.