தென்காசி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்!

- Advertisement -

0

தென்காசி அருகில் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்  நடந்தது. இக்கருத்தரங்கில் கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் பொ தங்கம் முன்னிலை வகித்தார். மாணவ ஆசிரியர் காவ்யா வரவேற்றார்.
குஜராத் அதானி துறைமுக இனோவேஷன் மேலாளர் சுப்பிரமணியன் கல்வியின் சிறப்பு, தனித்திறன் வளர்ச்சி, வளரும் நவீன தொழில் நுட்பம் குறித்து பேசினார்.சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் பிரான்சிஸ் ஆபிரகாம், கணிதத்துறை கௌரவ விரிவுரையாளர் ஜெகானந்த ஜோதி, ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளர் உம்மு ஷமீமா, நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னப் பாக்கியம் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சொர்ணலதா, கணிணி அறிவியல் உதவி பேராசிரியர் ஜோம்பிஸ் சுதா இலஞ்சி கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் ஷீலா நவரோசி, ஹெப்சி, நூலகர் முனைவர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர் பிரெட்ரிக் பேதுரு லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மாணவ ஆசிரியர்கள் மன்சூரா, நமீதா, ஹெப்சி ஆகியோர் தொகுத்து வழங்கினர் பேராசிரியர் ஜெனிபர் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.