நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மீட்டெடுக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத்!
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஹாக்கி போட்டிகளை துவக்கி வைத்து வீரர்களுக்கு ஹாக்கி மட்டை மற்றும் டீசர்ட்களை வழங்கினார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது,ஹாக்கி விளையாட்டு நமது நாட்டினுடைய தேசிய விளையாட்டு. அந்த ஹாக்கி விளையாட்டு மூலம் இந்தியாவிற்கு அன்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் கிடைத்துள்ளது.
ஒரு காலத்தில் ஹாக்கியென்றால் இந்தியாதான் என்ற ஒரு மரபை நாம் பெற்றிருந்தோம். அது கொஞ்சகாலமாக மறைந்து வந்தது. ஆனால், தற்போது நமது ஹாக்கி அணி சிறப்பாக தயாராகியுள்ளது. நீங்கள் அனைவரும் நன்றாக இந்த போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கும், தேசிய அளவிலான போட்டிகளுக்கும் தகுதிபெற்று, இறுதியில் உலகளவிலான போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மீட்டுக்கொடுப்பதில் தூத்துக்குடி மாவட்டமும் பங்கெடுக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நலஅலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் விளையாட்டு வீரர் மற்றும் வீராகனைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.