திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுருக்கூரில் அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமண விழா…!
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது வேங்கூர் ஊராட்சி .இங்கு உள்ள கீழ முருக்கூர் கிராமத்தில் ஸ்ரீ சப்பானி கருப்பு கோவில் வளாகம் சாலையோரம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்களால் அரச மரமும் வேப்ப மரமும் நட்டு வைக்கப்பட்டு இன்று பிரம்மாண்டமாக தழைத்து வளர்ந்து உள்ளது. வளர்ந்த மரங்களுக்கு பாரம்பரிய ஐதீகப்படி திருமணம் செய்து வைத்தால் கிராமத்தில் விவசாயம் செழிக்கும் நன்கு மழை பொழியும் கிராம மக்கள் செல்வ செழிப்புடனும் அமைதியுடனும் வாழ்வர் என்பது மக்களின் நம்பிக்கை.
இதனை அடுத்து கீழ முறுக்கூர் ஸ்ரீ சப்பானி கருப்பு கோவில் ஆலய வளாகத்தில் பஸ் ஸ்டாப் பகுதியில் வளர்ந்துள்ள அரசமரம் வேப்பமரம் ஆகியவற்றிற்கு ஊர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து இன்று காலை ஒன்பது மணியிலிருந்து பத்து முப்பது மணிக்குள் தாலி கட்டி திருமணம் செய்து வைத்தனர். இதில் கிராம மக்கள் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பயபக்தியுடன் அரசு வேம்பு மரத்தினை வழிபட்டனர்.