பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…திருச்சியில் பரபரப்பு!

- Advertisement -

0

திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான இந்தியன் பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால் அந்த பகுதி முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது.இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயின்று வரும் நிலையில், இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பள்ளி தாளாளரின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

தமிழகத்தில் திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான இந்தியன் பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால் அந்த பகுதி முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது.இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயின்று வரும் நிலையில், இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பள்ளி தாளாளரின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மின்னஞ்சல் யார் அனுப்பியது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையேயும் அந்த பகுதி மக்களிடையேயும் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.