கரூரிலிருந்து திருச்சிக்கு குட்கா கடத்தப்படுவதாக திருச்சி எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தனிப்படை போலீசார் ஜீயபுரம் பகுதியில் வாகன சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டு ஜீயபுரம் போலீசில்ஒப்படைக்கப்பட்டது. ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்தார். அப்போது தனிப்படை போலீசார் கைப்பற்றிய குட்காவின் மதிப்பும், குணசேகரன் வழக்குப்பதிவு செய்யப்பட்ட மதிப்பும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. இது தொடர்பாக எஸ்.பி வருண்குமார் உத்தரவு விட்ட பேரில் தவறு நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. எனவே ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் 4 போலீசாரை ஆயுத படைக்கு மாற்ற எஸ்.பி வருண்குமார் உத்தரவு பிறப்பிதார்.