தனது சாதனையை தானே தகர்த்த ஸ்வீடன் தடகள வீரர்!

- Advertisement -

0

போலந்து நாட்டில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தடகள வீரர் அர்மண்ட் டுப்லாண்டிஸ் (மோண்டோ), கம்பு ஊன்றி தாண்டும் போல் வால்ட் விளையாட்டில்   6.26 மீட்டர் உயரத்தை கடந்து அசத்தியுள்ளார். பத்தாவது முறையாக உலக சாதனையை தகர்த்துள்ள்ளார்.

- Advertisement -

அண்மையில் தான் பாரிஸ் ஒலிம்பிக்கில் 6.25 மீட்டர் உயரத்தை கிளியர் செய்து அசத்தினார். அதன் மூலம் தங்கமும் வென்றிருந்தார். இப்போது தனது சாதனையை தானே தகர்த்துள்ளார். நடப்பு ஆண்டில் இதுவரை மூன்று முறை உலக சாதனையை தகர்த்துள்ளார்.24 வயதான அவர் தனது ஆட்டத்தின் மூலம் உலக மக்களை ஈர்த்து வருகிறார். டைமண்ட் லீகில் 6.26 மீட்டருக்கு பாரை உயர்த்தி, அதனை வெற்றிகரமாக கடந்து போலந்து பார்வையாளர்களை ஆச்சரியம் கொள்ள செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.