ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த 1000 பேர் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையில் வகித்தார். கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம். பி முன்னிலையில் பல்வேறு சமுதாய சேர்ந்தவர்கள் தங்களை விடுதலை சிறுத்தை கட்சியில் இணைத்து கொண்டனர்.
முன்னதாக கட்சி கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். திருமா ஆட்டோ நல சங்கம் சார்பில் தொல். திருமாவளவன் 62 வது பிறந்தநாளை முன்னிட்டு 62 பயனாளிகளுக்கு ஆட்டோ வழங்கப்பட்டது.திருமாவளவனின் முகம் பதிக்கப்பட்ட 62 வெள்ளி நாணயங்கள் மற்றும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நிதியாக 62,626 பணம் மாவட்ட செயலாளர் சாதிக் தலைவரிடம் வழங்கினார்.
விழாவில் கட்சியின் ஈரோடு -திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன், முற்போக்கு மாணவர் கழகத்தின் துணை செயலாளர் நெப்போலியன், மாவட்ட அமைப்பாளர்கள் செந்தமிழ்வளவன், திருநாவுக்கரசு, நிர்வாகிகள் மனோஜ் முத்துசாமி, தமிழரசன்,தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல், மாநகர துணை பொதுசெயலாளர் கனியமுதன், நிர்வாகிகள் பைசல் அகமது, அக்பர் அலி, பால்ராஜ், துரை பாலு, சித்திக், ஆனந்தன், எழில், அந்தியூர் தீபா, மூர்த்தி, மணிமேகலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.