வஉசி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு : நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

- Advertisement -

0

திருச்சி,திருவரங்கம் பகுதி கல்மேட்டு தெரு “ஸ்ரீ “இல்லத்தில் வ உ சி பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தலைவர் சங்கர் பிள்ளை தலைமை வகித்தார். பகுதி தலைவர் முருகன் பிள்ளை, பொருளாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குவதும், ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டன.பின்னர் ஐயா வ உ சி அவர்களின் பிறந்த தினத்தை சீரும் சிறப்புமாக கொண்டாவது குறித்து  பற்றி தீர்மானம் எடுக்கப்பட்டன.

- Advertisement -

சிறப்பு அழைப்பாளராக சட்ட ஆலோசகரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் செல்வராஜ் பிள்ளை, கந்தன் பிள்ளை, ரங்கராஜ் பிள்ளை, நாகரத்தினம் பிள்ளை, கண்ணன், கண்ணுசாமி ஆறுமுகம், மெக்கானிக் வைரம் அசோக் டெய்லர் ராதாகிருஷ்ணன் மணிகண்டன் சரவணன் பாலசுப்ரமணியன் கமலக்கண்ணன் பால் ஜெயராமன் பிரபாகரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவில் மெக்கானிக் கணேஷ் நன்றி கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.