முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர கலந்தாய்வு குறித்த அறிவிப்பு!

- Advertisement -

0

நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கை ‘முதுநிலை நீட்’ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.இந்ததேர்வை, மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்) நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது. நாடுமுழுக்க 170 நகரங்களில் 500 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

- Advertisement -

இந்த தேர்வை, நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 28 ஆயிரம் மருத்துவர்கள் எழுதினர். இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பதை அடுத்து, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.