திருச்சி மாவட்டம் உறையூரில் தனியார் பள்ளி அருகே வசிக்கும் விதவை பெண்மணியான சங்கீதா என்பவர் தனது வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த தங்கச சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.