திருச்சி மாநகரில் முக்கிய ரோடுகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவு சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை மாநாகரட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக மாநகராட்சி சார்பில் 2 ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டு கால்நடைகளை பிடிப்பதற்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளன. தினசரி 10 முதல் 12 கால்நடைகளை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் தேடிவரும் கால்நடை உரிமையாளர்களிடம் ரூ. 2500 முதல் ரூ 5000 வரை அபராதம் செலுத்தி கால்நடைகளை மீட்டு செல்கின்றனர். ஆனால் ஒரு சிலர் தங்கள் கால்நடைகளை பிடித்து சென்றதில் கண்டு கொள்வதில்லை. இவ்வாறு யாரும் உரிமை கோராத கால்நடைகளை கோணக்கரையில் உள்ள பிரத்யேக இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. வாரக்கணக்கில் உரிமை கோராத 15 கால்நடைகளை மாநகராட்சி சார்பில் ரூ 1.50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டு இதன் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.