திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி கீழ் இயங்கும் ஆயிஷா பெண்கள் மெட்ரிக் பள்ளியிலன் 13 வது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி நாளை (24ம் தேதி ) பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமேஷ் பிரபு கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். ஜமால் முகமது கல்லூரி செயலாளரும், தாளாளருமான ஏ.கே. காஜா நஜூமுதீன் தலைமை வகிக்கிறார் .பொருளாளர் எம.ஜெ. ஜமால் முகமது, இணை செயலாளர் கே. அப்துஸ் சமது, கௌரவ இயக்குனர் கே.என். அப்துல் காதர் நிஹால், முதல்வர் டி.ஐ.ஜார்ஜ் அமலரத்தினம், பள்ளி முதல்வர் கருண்யா வரவேற்புரை ஆற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியைகள் செய்து வருகின்றனர்.