தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வாகன ஓட்டிகளை பழிவாங்கும் மரண பள்ளம்:சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை…!

- Advertisement -

0

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தை சேர்ந்த ததேயு என்பவரின் மகன் பிரகாஷ். இவர் சாயர்புரம் அருகே நடுவைக்குறிச்சியில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கோவை செல்லும் சித்தப்பா மகனை வழியனுப்புவதற்காக தூத்துக்குடி வந்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில், உறவினரான டாரிஷ் என்பவருடன், நடுவைகுறிச்சி திரும்பியுள்ளார். அப்போது, இரவு சுமார் 9.30 மணியவில் அந்தோணியார்புரம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக தூத்துக்குடி-நெல்லை சாலையின் நடுவே உள்ள 20 அடி மரண பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்துள்ளார். இதில், படுகாயமடைந்த இருவரையும் கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

- Advertisement -

தூத்துக்குடி அருகே அந்தோணியார்புரத்தில், தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் சாலை அடித்து செல்லப்பட்டு சுமார் 20 அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் இருபக்கமும் மணல் நிறப்பி தற்காலிக சாலையை உருவாக்கினர். அதன் வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது. கனமழையினால் சாலை அடித்துச் செல்லப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகியும், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்காததால், அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.

தூத்துக்குடி- நெல்லை நெஞ்சாலை என்பதால் அதிக போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதும், பள்ளித்தில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான மின்விளக்கு வசதி செய்யப்படாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு அதில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விடுகின்றனர். இதுவரை சுமார் 16 பேருக்கு-மேல் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிகை விடுக்கும் வகையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும், விரைவில் பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.