திருச்சியில் ‘நிழலில்லா நாள்’ பொருட்களின் நிழல்களின் நீளத்தை அளப்போம் வருகிறீர்களா….?
பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்குத் தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக்கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தில் செங்குத்தாக இருக்கும். ஆக ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது எனப்புரிகிறதல்லவா? அந்த நாளையே நிழலில்லா நாள்'(Zero Shadow Day) என்கிறோம்.மகரரேகைக்கும்(Tropic of Capricorn) கடகரேகைகக்கும்( Tropic of Cancer) இடையில் உள்ள நாடுகளில் மட்டுமே இந்நிகழ்வைக்காண முடியும்.
திருச்சியில் உள்ளவர்கள் இன்று (23-08-2024) மதியம் சரியாக 12:18 உங்கள் நிழல் உங்கள் காலுக்கு கீழே இருப்பதை காணலாம். அந்த நேரத்தில் பல்வேறு பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாவதைக் கண்டு படம் எடுத்து மகிழலாம்.இன்று காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை மன்னார்புரத்தில் உள்ள பாரதி மெட்ரிக் பள்ளியில் தாளாளரும், முதல்வருமான பாலா பாரதி தலைமையில் மாணவ மாணவிகளுக்கு நடத்தி காண்பிக்கப்பட்டது.