கேரள மாநில தற்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் வேணு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அதே நாளில் அவரது மனைவி புதிய தலைமைச் செயலாளராக சாரதா சாரதா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார் கேரள மாநில மக்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.கணவர் பணி ஓய்வு பெறும் அதே நாளில், அதே பதவிக்கு மனைவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கணவர் ஓய்வு பெற்ற பிறகு தலைமைச் செயலாளர் பதவியில் மனைவியும் அமர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வகிக்கும் பதவியை மனைவி வகிப்பது இந்தியாவில் மிகவும் அரிதான நிகழ்வு என்பதால் முழு கவனம் பெற்றுள்ளது. இம்மாதம் 31ஆம் தேதி வேணு தலைமைச் செயலாளராக வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார், ஆனால் தலைமைச் செயலாளராக வேணுவின் மனைவி சாரதா முரளிதரன் அதே காரில் வீட்டில் இருந்து தலைமைச் செயலகத்துக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.