திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட திருச்சி, தஞ்சாவூர் உள்பட 94 முக்கிய ரயில் நிலையங்களில் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தி முன்பதிவு இல்லாத டிக்கெட்களை பெறும் வகையில் டிக்கெட் கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது.இந்த புதிய நடவடிக்கை மூலம் அனைத்து பயணிகளும் டிக்கெட்களை எளிதாக பெற முடிகிறது.இதனால் சில்லறைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.