இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொங்குநாடு கல்லூரி…!
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையே 2024-25 ஆண்டுக்கான 14 வது மண்டல அளவில் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இதில் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து,ஹாக்கி,கபடி, டேபிள் டென்னிஸ், தடகளம், கோகோ, செஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று மொத்தம் 760 ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கொங்குநாடு கல்லூரி பெற்றது.
சென்னையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் வேல்ராஜ், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் நபி முகமது ரியாஸ் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் இணைந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். சாம்பியனுக்கான கோப்பையை கல்லூரி நிறுவனத்தின் சார்பில் ஐஸ்வர்யா தென்னரசு, கல்லூரி முதல்வர் அசோகன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் பெற்று கொண்டனர்.இப்போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளை கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.