ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் 3, 10 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்கு கட்சி முழுமையாக தயாராகிவிட்டது. வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் , எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் பாஜக தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காது என்று மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறினார்.