திருச்சி கீ அறக்கட்டளை, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் திருச்சி மாநகராட்சி மண்டலம் -1 இணைந்து பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்

- Advertisement -

0

திருச்சி கீ அறக்கட்டளை, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் திருச்சி மாநகராட்சி மண்டலம் -1 இணைந்து பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஸ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இம் முகாமை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறுகையில் கீ அறக்கட்டளையின் முயற்சிகள் பற்றி வாழ்த்து பேசினார். மக்களின் நலனுக்காக அரசாங்கத்தினால் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் முன்னேற்றம் தமிழக அரசின் முக்கிய நோக்கம் என்றார். மேலும் வருகிற ஆண்டில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு வார்டு வாரியாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி தகுதியான நபர்களை திட்டங்களுடன் இணைத்து அவற்றின் பலன்கள் பெறுவதற்கு ஏற்ப வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் ராம்குமார் சிறப்புரை ஆற்றினார்.

- Advertisement -

கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் பொது மக்களுக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு NABL சான்று அளிக்கப்பட்ட ஆய்வகங்களில்.ரூ 5000 மதிப்புள்ள மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகள் முடிவில் அடிப்படையில் மகப்பேறு, நீரிழிவு,மனநல மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டிகள், உணவு நிபுணர்கள், பொது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் முகாம் நடைபெற்றது. இதில் 650 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.