பொதுவாக சாலை விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது. சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா விடில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் அரசு பேருந்தில் செல்லும்போது ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டே அல்லது செல்போன் பார்த்தபடி வாகனம் ஓட்டுவதாக புகார் எழுந்துள்ளது. சில ஓட்டுனர்கள் இப்படி செய்வதால் அது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் லீக்கான சமயத்தில் அவர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அந்த வகையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் அவர்கள் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தற்போது போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் சமீப காலமாக இது போன்ற செய்திகள் வெளியான நிலையில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தற்போது அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தககூடாது என்றும் மீறினால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.