மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம்…நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு…!

- Advertisement -

0

திருச்சி பீமநகரில் மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இளைஞர் அணியின் மாநில செயலாளர் தாம்பரம் அன்சாரி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நெல்லை ரியாஸ் வரவேற்பு உரையாற்றினார்.மாநில துணை செயலாளர்கள் சிவகங்கை இம்ரான், ஈரோடு மீரான், ஆம்பூர் இர்பான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

- Advertisement -

மனிதநேய மக்கள் கட்சியின்மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா சிறப்புரையாற்றினார். பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது,தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், துணை பொது செயலாளர்கள் தாம்பரம் யாக்கூப், தஞ்சை பாதுஷா, சலிமுல்லாஹ் கான், இளைஞர் அணியின் தலைமை பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான வழக்கறிஞர்.புழல் ஷேக் முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினர்.இந்த செயற்குழு கூட்டத்தில் பாலஸ்தீன காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் அத்துமீறலால் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். அதற்கு துணையாக வரும் அமெரிக்காவை நடவடிக்கை எடுக்காத ஐ.நா சபையை வண்மையாக கண்டித்தும்,தமிழகத்தில் புலனாய்வு நிறுவனம் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து விசாரணை பெயரில் தொடர்ந்து அத்துமீறி செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டிலிருந்து 7% உயர்த்தி தருமாறு தமிழக அரசை வலியுறுத்தியும் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர் அணியின் மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், இப்ராஹிம் ஷா, ஹுமாயூன் கபீர், மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் முபாரக், பொருளாளர் பக்ரூதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.