திருச்சி அருண் ஹோட்டலில் இந்திய தேசிய நுகர்வோர் சம்மேளனம் சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இணை செயலாளர் எஸ்.சக்திவேல் வரவேற்றுப் பேசினார். தேசிய செயல் தலைவர் எம். செல்வராஜ் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சிக்கு மதுரை மண்டல தலைவர் மனோகரன் சாமுவேல், திருச்சி மாவட்ட செயலாளர் அமல் சந்தோஷ், மதுரை மாவட்ட தலைவர் அமல்ராஜ், தஞ்சை மண்டல தலைவர் நாராயணசாமி, கோவை மண்டல செயலாளர் பார்வதி, கோட்டை மாவட்ட தலைவர் லதா உத்தமன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தொழிலாளர் நலத்துறை உதவியாளர் ( ஓய்வு) சிவஞானம், தேசிய துணை தலைவர் செல்வம், தேசிய பொது செயலாளர் திருநாவுக்கரசு, தேசிய செயலாளர் நாகராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் டேனியல்,ரேமண்ட், மாநில துணைத் தலைவர் குமரேசன், மாநில செயலாளர் தாந்தோணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்திய தேசிய நுகர்வோர் சம்மேளன நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் ஜோன்ஸ் கருணாகரன் நன்றி கூறினார்.