கீ அறக்கட்டளை மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இணைந்து திருச்சி மாநகராட்சியில் உள்ள ஜெ.ஜெ.நகர் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் ரத்த பரிசோதனையின் மூலம் சர்க்கரை, தைராய்டு கொலஸ்ட்ரால் கல்லீரல் சிறுநீரக செயல்பாடு போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது. சிறுநீரக பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை,எடை உயரம் ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது. கலந்து கொண்ட ஒருவருக்கும் சுமார் 5,000 மதிப்புள்ள பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இம்முகாம் இன்றும் (22.12.2024) நடைபெறுகிறது. இரண்டு நாள் முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு வரும் 29ஆம் தேதி அன்று மகப்பேறு, எழும்பியல், நீரிழிவு, பொது மருத்துவர், மனநல ஆலோசகர், பிசியோதெரபிஸ்ட், உணவியல் நிபுணர் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவர்களின் ஆலோசனைகளை வழங்கப் படுகிறது. இம்முகாமில் ராம்குமார், மாநகராட்சி மண்டலம் -1ன் உதவி கமிஷனர் ஜெயபாரதி, ஆம் என்ற உறுப்பினர் ராதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற வள்ளுவன் கூற்று கேட்ப பெண்களின் ஆரோக்கியத்தினை முன்னிலைப்படுத்தி முறையான பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறது கீ அறக்கட்டளை.