தமிழகத்தில் முடித்திருத்தம் கட்டணம் உயர்வு:முடி​திருத்​தும் தொழிலா​ளர்கள் சங்கத்​தின் நிர்​வாகக் கூட்டத்தில் முடிவு!

- Advertisement -

0

தமிழ்​நாடு பாரம்​பரிய மருத்​துவர் சமூகம் மற்றும் முடி​திருத்​தும் தொழிலா​ளர்கள் சங்கத்​தின் நிர்​வாகக் கூட்டம் சென்னை​யில் நடைபெற்​றது. இதில் சங்கத்​தின் மாநிலத் தலைவர் ப.நட​ராஜன் பாரதி​தாஸ், செயலாளர் கே.செல்​லப்​பன், பொருளாளர் டி.சர​வணன், ஒருங்​கிணைப்​பாளர் எஸ்.ஜெய்​சங்​கர், அமைப்புச் செயலாளர் பி.சுரேஷ் உள்ளிட்​டோர் பங்கேற்​றனர்.அதில் கடை வாடகை, மின் கட்டணம் உள்ளிட்​ட​வற்றின் உயர்வு குறித்து விவா​திக்​கப்​பட்​டது. இதையடுத்து, தமிழகம் முழு​வதும் முடி​திருத்​துதல் உள்ளிட்​ட​வற்றுக்கான குறைந்​த​பட்ச கட்ட​ணத்​தில் ரூ.10 உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டது.

- Advertisement -

இது தொடர்பாக மாநிலத் தலைவர் ப.நடராஜன் பாரதிதாஸ் கூறும்போது, “முடிதிருத்தும் நிலையம் வைத்துள்ள கார்ப்பரேட் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் சேவிங் ரூ.49, கட்டிங் ரூ.99 என கட்டணம் நிர்ணயித்து சாதாரண தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவர்களும் கட்டணத்தை உயர்த்த வேண்டும்திருத்தப்பட்ட விலை பட்டியலின்படி, சேவிங் ரூ.60, கட்டிங் ரூ.120, கட்டிங், சேவிங் ரூ.180, சிறுவர் கட்டிங் ரூ.100 என்பதை குறைந்தபட்ச கட்டணமாக வசூலிக்க வேண்டும். இதில் இருந்து ரூ.10 அதிகரித்து ஏசி உள்ள கடைகள் வசூலித்துக் கொள்ளலாம்” என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.