இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தாய் ஏர் ஏசியா விமானத்தில் அங்கித் குமார் என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் தன்னுடன் விமானத்தில் வந்த பயணிகள் நின்று கொண்டு வந்ததாகவும், நின்று கொண்டே சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கிறது. அப்போது இருக்கையில் இருப்பவர்கள் அங்கும் இங்குமாக எழுந்து நடந்து கொண்டிருப்பதோடு நின்று கொண்டே சாப்பிடுகிறார்கள்.
அதோடு பின்னால் அமர்ந்திருப்பவர்களிடமும் திரும்பி நின்று பேசுகிறார்கள். அவர்களிடம் பயணங்களில் போது இப்படி செய்ய வேண்டாம் தங்களுடைய இருக்கைகளில் சென்று அமருமாறு கேபின் குழுவினர் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும் அவர்கள் அதனை கேட்கவில்லை. இந்த வீடியோவை பகிர்ந்த அவர் இந்தியர்கள் எல்லா இடத்திலும் அவமதிக்கப்படுகிறார்கள். விமானத்தை கூட தற்போது ரயில் மற்றும் பேருந்து போன்று மாற்றிவிட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் விவாதம் காற்றில் பறந்து கொண்டிருக்கும்போது அவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆதங்கத்தோடு பதிவிட்டுள்ளார்.