திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (21.12.2024) தவிர்க்க முடியாத அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.எச்.காலனி, உஸ்மான்–அலி தெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோஸ்ரோடு, கேசவநகர், காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ்நகர், ஹைவேஸ்காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதாபுரம், செங்குளம் காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காரோடு (கலெக்டர் பங்களா) ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி மன்னார்புரம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.