தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் கிங்காங். இவர் கடந்த 1988-ம் ஆண்டு வெளிவந்த நெத்தியடி படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி ஆனார். இதைத்தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய கிங்காங், நடனத்திலும் கில்லாடியாக இருந்து வந்தார். இவரின் நடன அசைவுகள் சோசியல் மீடியாவிலும் பெரிதும் ரசிக்கப்பட்டன. இந்த நிலையில் நடிகர் கிங்காங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வந்த நிலையில் அவர் தாயார் காசி அம்மாள் இன்று அதிகாலை 1.30 மணியளவி மரணமடைந்தது கிங்காங்கை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.அவர் தனது பிறந்தநாள் அன்றே தன் தாய் இறந்ததால் மிகுந்த சோகத்தில் உள்ளாராம். அவருக்கு உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்