இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!
அம்பேத்கரை அவமதித்ததாக பாஜக அரசு கண்டித்தும், உள்துறை அமைச்சரான அமித்ஷாவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சூர்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே.மோகன் கண்டனம் உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீநாத், திருமால் ,சுதேசேனா, அன்பு மற்றும் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .பாஜக அரசுக்கு எதிராகவும், அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இறுதியாக மாவட்ட குழு உறுப்பினர் ஆர்த்தி உரையாற்றினார்.