உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!
அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன்,கே.என்.சேகரன்,சபியுல்லா,பகுதி செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், ஏ.எம்.ஜி விஜயகுமார், பாபு, மணிவேல்,சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் தனசேகரன், கவுன்சிலர்கள் கார்த்திக், சாதிக் பாட்சா, ரகுநாதன் கருணாநிதி, ஜோயல் மற்றும் தெற்கு மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி, பேரூர் கிளை கழக நிர்வாகிகள்,பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .நிறைவில் பகுதி கழகச் செயலாளர் மோகன் நன்றி கூறினார்.