முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவு நாளில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார்…
திருச்சி கிழக்கு மாவட்டம் மலைக்கோட்டை பகுதி உட்பட்ட வார்டு 15 காவிரி ரோட்டில் அமைந்துள்ள முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர்கள் சாட்டை துரைமுருகன், அசுரன்,சரவணன், மண்டல செயலாளர்கள் பிரபு, தனபாலன்,ஜல்லிக்கட்டு ராஜேஷ் , திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் நாகேந்திரன், மாவட்ட செயலாளர் ரஞ்சித் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர் .கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் மலைக்கோட்டை பகுதி செயலாளர் கா ஹரிஹரன் நன்றி கூறினார்.