நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டிம் சௌதி தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடியது.
இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிய நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடியது. இறுதியில் 423 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியுடன் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் சௌதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்